எளிய மக்களின் நம்பிக்கையை பெறுவது அவ்வளவு சுலபமல்ல. அதே போல் தான் அவர்களின் நம்பிக்கையை உடைப்பதும். மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று நகரங்களில் வசிக்கும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த சுமார் ஒரு மாத காலம் ஆனது. அந்த இடைப்பட்ட காலத்தில் பிரதமர் உட்பட நாட்டின் அதிகாரத்தில் இருப்பவர்களே கூட அலட்சியமாக நடந்து கொண்டதை பார்த்தோம். மொட்டை மாடியில் நின்று கை தட்டுவது, விளக்கு ஏற்றுவது, மீம்ஸ் போடுவது, கொரோனாவை வைத்து ஒரு முமு நீள காமெடி திரைப்படம் எடுக்கும் அளவிற்கு இளைஞர்கள் தங்கள் எல்லையற்ற சித்தரிப்புகளை செய்தனர். கொரோனாவையும் கிள்ளுக் கீரையாக நினைத்ததற்கு மீம்ஸ் ஒரு முக்கிய காரணம். பிறகு நகரத்தார் சற்று சுதாரித்தனர். வீட்டிற்குள் முடங்கினர். ஆனால் கிராமங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் அவர்களின் வெள்ளந்தி மனசு போலவே இருந்து வந்தனர். அதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான். கிராம மக்கள் அவ்வளவு எளிதில் அடுத்தவரிடம் அடி பணிய மாட்டார்கள். ஒரு விதமான வீம்பு குணம் அவர்களை உரசி பார்க்கும் அவ்வப்போது.அதே போல் நகர மக்களுக்கு அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. விளையாட்டு ஆர...
வரலாற்றின் விசையை அறியும் ஓர் முயற்சி. சேர்ந்து பயணிப்போம்.