ஜோதிதுர்கா மரணமும், கங்கனா அரசியலும்!
கங்கனா ரனாவத், இன்றைய தலைமுறையின் ‘பகத்சிங்’ என்று தம் வார்த்தைகளால் வரலாற்றில் நாட்டின் விடுதலைக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு உன்னத வீரனின் வாழ்க்கையை அரசியலுக்காக சினிமா தளங்களை நிஜவாழ்க்கையில் செய்து கொண்டிருக்கும் ஒரு நடிகையின் வாழ்க்கையை ஒரு ஒப்பீடு செய்திருக்கிறார் தமிழ் நடிகர் விஷால்.
யார் இந்த கங்கனா ரனாவத்?
இதை நான் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இருக்காது.ஏனெனில் நாட்டிலுள்ள அத்தனை ஊடகங்களும் கடந்த 10 நாட்களாக அதிகம் ஒளிபரப்பப்பட்ட செய்தி இந்த நடிகையின் செய்தியே. இதை தவறு என்று நான் கூற எனக்கு உரிமை இல்லை. ஒரு நடிகையாக இருந்தாலும் பேச்சு சுதந்திரம் இருக்கும் நம் இந்திய நாட்டில் அவர் நினைத்ததை பேசும் உரிமை அவருக்கு உள்ளது. அதை எதிர்த்து அரசாங்கம் அவருக்கு எதிராக சில நடவடிக்கைகளை எடுத்ததை நம்மால் பார்க்க முடிகிறது.
இந்த ஒரு விஷயத்தை பத்து நாட்களாக பலதரப்பட்ட அறிஞர் பெருமக்களை அழைத்துவந்து விவாதத்தில் ஈடுபட வைத்து, கவர் ஸ்டோரி ஆக்கியிருக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல், அவருடைய கட்டிடம் அரசாங்க விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி சில பகுதிகளை மஹாராஷ்டிரா அரசாங்கம் இடித்தது. இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நொடிகளில் மத்திய அரசாங்கம் கங்கனா ரனாவத் இருக்கு Y+ செக்யூரிட்டி கொடுத்து அவரை ஒரு உன்னத தியாகி போல சித்தரிக்க துடித்தது.
Y+ செக்யூரிட்டி என்பது நாட்டில் எவரேனும் பிறரின் அச்சுறுத்தல்கள் காரணமாக ஆபத்தில் இருந்தால் அவர்களை காப்பதற்காக CRPF கமாண்டோக்கள் ஐ கொண்டு மிகவும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழங்கப்படும்.
சரி இவரும் இவரின் கதையும் ஒரு பக்கம் இருக்கட்டும்.
இன்றைய இந்திய சமூகத்தில் ‘ தகுதி’ என்ற ஒற்றை கருவி மூலம் உருவாகியிருக்கும் பலதரப்பட்ட அச்சுறுத்தல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் நம் மாணவ-மாணவிகளே. அவர்களுக்கு அரசாங்கம் Y+ செக்யூரிட்டி வழங்கத் தேவையில்லை. குறைந்தபட்ச கருணை காட்டினால் போதும் அவர்கள் வாழ்வில் மேன்மை அடைந்து விடுவார்கள்.
நீட் என்ற ஒற்றை நுழைவுத்தேர்வில் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மாணவ மாணவிகளின் மருத்துவராகும் கனவு கானல் நீராக போனது.போய்க்கொண்டிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், நீட் தரும் அழுத்தத்தினால் வருடத்திற்கு நான்கைந்து மாணவ மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட சம்பவங்களை கவர் ஸ்டோரி ஆக்காமல் ஒரு நடிகையின் அதட்டலான நடையை கமர்சியல் மெட்டீரியல் ஆக்கி காசு பார்க்கும் கும்பல் பெயரளவிற்கு ஊடகங்களை நடத்தி வருகிறது.
இன்று அதிகாலை மதுரையைச் சேர்ந்த 19 வயதான, ஜோதி துர்கா என்ற மாணவி, ‘ என்னை மன்னித்து விடுங்கள், நான் சோர்வடைந்து விட்டேன்’ என்று தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியை எந்த ஒரு ஊடகமும் பெயரளவிற்கு கூட விவாத பொருளாக எடுத்து விவாதிக்கவில்லை.
அப்படி சமூக வலைதளங்களில் விவாதிக்கும் ஒரு சிலரையும் ஏளனமாக சித்தரித்து விமர்சித்து வருகிறது.
தகுதியை மீறி சீட் கொடுக்க நாங்கள் என்ன முட்டாளா. முடிந்தால் நீ நுழைவுத்தேர்வை எழுதி அதிக மதிப்பெண் எடுத்த மருத்துவர் ஆகுங்கள் என்று சிலர் தங்களின் பொன்னான சிந்தனைகளை சமூகத்திற்கு பாய்ச்சுகின்றன.
‘ தகுதி’ என்பது இன்றைய சமூகத்தில் அனைவருக்கும் கிடைக்கும் பொருள் அல்ல. திறமையினால் கிடைக்கும் பரிசு அல்ல. பணம் இருந்தால், 10 பைசாவிற்கு தகுதி இல்லாதவன் கூட இந்த சமூகத்தில் தான் தகுதியானவன் தான் என்பதை நிரூபிக்க முடியும்.
இப்படிப்பை படிப்பதற்கே படாதபாடுபட்டு பல்வேறு இன்னல்களை துன்பப்பட்டு துயரப்பட்டு தேர் வரும் மாணவ-மாணவிகள் நீட் என்ற சமூக அநீதி உயிரை காவு வாங்கும் கிணற்றில் தள்ளப்படுகின்றனர்.
ஊடகங்களால் ஒரு செய்தியை நாட்டிற்கு தெரிய படுத்துவதற்கும் ‘ தகுதி’ வேண்டும் போல. பணம் மற்றும் சினிமா விளம்பரத்தால் கங்கனா ரனாவத் சாமர்த்தியமாக தனக்கு நேர்ந்த பிரச்சினையை தன் ஆதரவு அலையாக மாற்றினார்.
ஆனால் நம் மண்ணைச் சேர்ந்த, அனிதா, விக்னேஷ், ஜோதி துர்கா போன்றோர் திறமை இருந்தும், பணம் மற்றும் சமூகத்தில் தனி சுதந்திரம் இல்லாத காரணத்தால் தங்கள் உரிமையை இழந்து இறுதியாக உயிரையும் இழந்தனர்.
ஊடக தர்மத்திற்கு வேண்டுமானால் இவர்களின் வாழ்க்கை ஒரு பொருட்டாக தெரியாமல் இருக்கலாம்.
ஆனால், மனித தர்மத்திற்கும் சமூக தர்மத்திற்கும் இவர்களின் இழப்பு ஒரு பேரிழப்பு. காலச்சக்கரம் சுழலும். அறம் வெல்லும்.அநீதி வீழும்.



கருத்துகள்
கருத்துரையிடுக